இலங்கை அணியில் இவர் தான் டாப்: அடுத்தடுத்து சிறந்த வீரர்களுக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்து அசத்தல்!
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் பிரபல ஆங்கில விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த ஒரு வாரங்களுக்கு முன்னர் ஐசிசி தன்னுடைய டெஸ்ட் அணியை அறிவித்தது. இதில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனே ஹெராத் இடம் பிடித்து அசத்தினார். மேலும் அதில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வினும் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல விளையாட்டு தொலைகாட்சி நிறுவனமான ESPNCRICINFO ரசிகர்களிடம் 2016 ஆண்டிற்கான சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் பண்முக ஆட்டக்காரர் யார் என்று கருத்துகணிப்பு நடத்தியுள்ளது.
இதில் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின், அவுஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஸ்டார்க், தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த ராபாடா மற்றும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஆகியோர் சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கனா ஹெராத் அடுத்தடுத்து சிறந்த வீரர்களுக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.