பளு தூக்கும்போது பரிதாபமாக உயிரை விட்ட வாலிபர்!
அமெரிக்க நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுப்பட்டபோது கை நழுவியதால் நிகழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Iowa மாகாணத்தில் உள்ள Ankeny நகரில் தான் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நகரில் Elite Edge என்ற உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் Kyle Thomson என்ற 22 வயதான வாலிபர் உறுப்பினராக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி கூடத்திற்கு பயிற்சி மேற்கொள்ள வாலிபர் சென்றுள்ளார்.
பளு தூக்கும் பயிற்சியில் ஈடுப்பட்ட அவர் 142 கிலோ எடையுள்ள இரும்பு தட்டுகள் அடங்கிய கம்பியை இருக்கையில் படுத்தவாறு தூக்கியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத வகையில் அவரது கை நழுவியதால் இருந்து கம்பி அசுர வேகத்தில் அவரது கழுத்தில் விழுந்து நசுங்கியுள்ளது.
இவ்விபத்தில் வாலிபரின் கழுத்து, தொண்டை பகுதிகளின் உட்புறம் சிதைந்து போயுள்ளது. மூர்ச்சையாகி கிடந்த வாலிபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடற்பயிற்சி கூடத்தில் நிகழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.