கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரேசில் கிரேக்க தூதரை கொலை செய்த மனைவி: வெளியான பரபரப்பு தகவல்!
பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் கொலையில் அவரது மனைவி சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டு கிரேக்க தூதராக பதவி வகித்து வந்தவர் Kyriakos Amiridis (59). இவர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிரேக்க தூதரகத்தில் பணிபுரிந்தார்.
இவரது வீடு நோவா பகுதியின் இகுயாசூ நகரில் உள்ளது. இவர் எதிர்வரும் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக ரியோ டி ஜெனிரோவில் இருந்து பிராசிலியாவின் Copacabana கடற்கரைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென்று மாயமாகியுள்ளார்.
இதனால் பொலிசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் Kyriakos Amiridis ரியோ டி ஜெனிரோ நகரில் தனது காருக்குள் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரது உடலை உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி குடும்பத்தார்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக பொலிசார் Kyriakos Amiridis வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் இரத்தக்கரை இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அவர் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவரது மனைவி பிரான்கோயிஸுக்கும், பிரேசில் காவல் அதிகாரியான செர்ஜியோ மொரைரா (29) என்ற நபருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.
இதற்கு Kyriakos Amiridis தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரேசிலியாவில் உள்ள அவரது வீட்டில் தூதரை இருவரும் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு காரில் எடுத்து சென்று உடலை எரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.