தீக்கிரையான 23 உயிர்கள்: சுவிஸில் இடம்பெற்ற கோர விபத்து
சுவிட்சர்லாந்தில் கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Hausen am Albis கிராமத்திலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது.
காலை மூன்று மணிக்கு தனது கொட்டகை தீ பிடித்து எரிவதை கவனித்த விவசாயி, உடனே குடும்பத்தினருடன் சேர்ந்து கொட்டகையில் இருந்த lamas மற்றும் குதிரைகளை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தீ எச்சரிக்கை மணி அடித்ததை கேட்டு சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். எனினும், இதில் 23 மாடுகள் பரிதாபமாக தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இந்த தீ விபத்தால் சுமார் 2 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.