3ம் உலகப் போர் 30 செக்கனில் நிறுத்திய அமெரிக்காவின் பரம ரகசியம்

3ம் உலகப் போர் 30 செக்கனில் நிறுத்திய அமெரிக்காவின் பரம ரகசியம்

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சு, பல வருடங்கள் கழித்து சில தகவல்களை மக்களுக்கு வெளியிட்டுள்ளது. இதனை அறிந்த ரஷ்யாவெ ஆடிப்போயுள்ளது. ஏன் தெரியுமா ? ஒரு நாள் அதிகாலை 2.30 மணிக்கு , ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இருந்து பல ஏவுகணைகள் அமெரிக்காவை நோக்கி வருவது அவதானிக்கப்பட்டதாம்.

உடனே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தூக்கத்தில் இருந்து எழுந்து , உடனே ரஷ்யாவை நோக்கி அணு ஆயுத ஏவுகணைகளை ஏவுமாறு உத்தரவிட்டார். இதற்கான இறுது வேலைகள் நடைபெற்று. ஏவுகணைகளை ரஷ்யா நோக்கி ஏவுமுன்னர்(30 செக்கனுக்கு முன்னர்) அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய தொழில் நுட்ப்ப வல்லுனர். நீங்கள் ராடர் திரையில் பார்பது பிழையான விடையம் என்றும். ரஷ்யா எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்றும் கூறியுள்ளார்.

வெறும் 42P பென்ஸ் பெறுமதியான கம்பியூட்டர் சிப் ஒன்று செயல் இழந்ததால். ரஷ்யாவில் இருந்து 2,200 ஏவுகணைகள் அமெரிக்கா நோக்கி வருவது போல ராடர் திரையில் காட்டியுள்ளது.

இதனை உண்மை என்று நம்பி ரஷ்யா மீது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவ அமெரிக்கா முற்பட்டுள்ளது. இது முதல் தடவையாக 1979ல் நடைபெற்றுள்ளது. அப்போது அமெரிக்க அதிபராக ஜிம்மி காட்டர் இருந்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ரகசிய அறிக்கையில் , இது போல 1,000 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்சையை தோற்றுவித்துள்ளது. ஏன் எனில் பல நூறு தடவை இதுபோல தொழில் நுட்ப்ப கோளாறுகள் ஏற்பட்டு, ரஷ்யா தம்மை தாக்குவதாக அமெரிக்கா நினைத்து, தனது தாக்குதலை தீவிரப்படுத்திய சம்பவம் பல உள்ளதாம்.

1962ம் ஆண்டு அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று தற்செயலாக புளோட்டோனியம் என்னும் கதிரியக்கம் கொண்ட அணு குண்டு ஒன்றை வடக்கு கரலோனா பகுதியில் உள்ள கடலில் வீழ்த்திவிட்டது.

அதன் விமானி தனது விமானத்தில் ஒரு பக்கத்தில் எடை குறைவாக இருப்பதை உடனே உணர்ந்துள்ளார். பின்னரே அவருக்கு தெரியவந்தது தாம் அணு குண்டை கடலில் போட்டு விட்டோம் என்று.

ஆனால் அது அமெரிக்க கடல் பரப்பு என்பதனால் தப்பித்தார்கள். இதுவே வேறு கடல் பரப்பாக இருந்து இருந்தால் நிச்சயம் அன் நாடு தாக்குதல் நடத்தி இருக்கும். இவ்வாறு சுமார் நூற்றுக்கணக்கான தடவை 3ம் உலகப் போர் மூழும் அபாயத்தை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.

இது அமெரிக்காவின் பல தொழில் நுட்ப்ப கோளாறுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் இது போன்ற வெளிப்படையான அறிக்கை எதனையும் ரஷ்யா இதுவரை வெளியிட வில்லை.

அன் நாட்டிலும் இது போல முன்னர் பல சம்பவங்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால் அவர்கள் அதனை வெளியிட மாட்டார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.

1,867 total views, 209 views today

– See more at: http://www.canadamirror.com/canada/77032.html#sthash.PJ0UGUYL.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News