திடீர் வெள்ளம்.. ருத்ரதாண்டவம் ஆடிய புயல்: தூக்கி எறியப்பட்ட வீடுகள்! அலறி அடித்து ஓடிய மக்கள்
பிலிப்பைன்சில் இயற்கையின் ருத்ரதாண்டவத்தால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நடு வீதிகளுக்கு வந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிவேக புயல் மணிக்கு 133 கி.மீற்றர் வேகத்தில் வீசியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி வாகனங்கள் அங்கிருந்த மரங்கள் என அனைத்தும் புயலை தாக்குபிடிக்க முடியாமல் தூக்கியெறியப்பட்டன. புயல் தாக்கத்தின் காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய புயல் சீற்றத்தின் போது கூட ஒரு சிலர் தங்கள் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தை கைவிட மறுப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளிவர மறுப்பதாகவும், அவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் மறுப்பதாக கூறியுள்ளார்.
சூறாவளியின் உச்சகட்டத்தால் ஏராளமான வாகனங்கள் தூக்கி விசப்பட்டதால் பொதுமக்கள் பலரும் நடந்து செல்வதாக கூறியுள்ளார். வீடுகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அனைவரும் சற்று சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக Milaor, Quezon city, உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் அந்நாட்டில் சிவப்பு அறிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.