யாழில் 184 மீற்றர் உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்தது
யாழ்.பண்ணை பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிகோம்மின் தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்ததினால் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
184 மீற்றர் உயரமான இந்த கோபுரம் இன்று கழற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போது மீதமாக இருந்த கோபுரத்தின் பகுதி அடியோடு சாய்ந்து விழுந்துள்ளது.
இதன்போது வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த கோபுரம் உடைந்து விழுந்ததினால் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோபுரத்தினை சீர்செய்யும் பணியில் ரெலிகோம் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கோபுரம் சாய்ந்து விழுந்ததினால் பண்ணைப் பாதையூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.