ஏமாற்றத்தால் நொந்து போன சார்லி சாப்ளின்! சோகமான வாழ்க்கை
சார்லி சாப்ளின் என்றால் பலரும் அறிந்திருப்பார்கள். பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக்கிய இவர் தன் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
ஆம்., சிறு வயது முதல் கஷ்டங்களை சந்தித்த இவர் சில பெண்களால் தொடர்ந்து ஏமாற்றங்களை சந்தித்தார். திருமணமே இவருக்கு தொடர்கதையாகி போனது.
1918 ல் 16 வயது இருக்கும் போது மில்ட்ரெட் ஹாரிஸ் என்னும் பெண்ணனை மணந்தார், இவர்களது குழந்தை பிறந்ததும் இறந்தது முதல் சோகம்.
பின் இரண்டே வருடங்களில் இவர்களுக்கு விவாகரத்து ஆனது. 1924 ல் லீடா க்ரே மீது இவருக்கு காதல் வந்தது. அப்போது சார்லிக்கு வயது 35 திருமணத்தின் போதே அப்பெண் கர்ப்பமாக இருந்தாராம்.
இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தது . இவ்வாழ்க்கையும் விவாகரத்தில் முடிய அந்நேரம் அவருக்கு பல பிரச்சனைகள்.
அவருக்கு எதிராக அவர் பற்றிய சில அந்தரங்க விஷயங்களும் வெளியே வந்தன. அதையும் சமாளித்த சாப்ளின் 1936-ல் பால்ட் கொடார்ட் என்பவரை 47 வயதில் திருமணம் செய்தார்.
இந்த ரகசிய திருமணமும் விவாகரத்தில் முடிய நடிகை ஜான் பேரியுடன் ரகசிய உறவு தொடர்ந்தது.
பேரியால் சில மனஅழுத்தத்தை சந்தித்த அவர், பின் இவரிடமிருந்து விலகிப்போனார். பேரி தன்னுடைய குழந்தைக்கு அப்பா சார்லி என 1943 ல் வழக்கு தொடர பிரச்சனை பெரிதானது.
உண்மை அதுவல்ல. சில உண்மை ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால் அக்குழுந்தையின் வயது 21 ஆகும் வரை வாரம் 75 டாலர்கள் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டது.
சார்லி குற்றமற்றவராயினும் இத்தண்டனையை அனுபவித்தார். பின் ஓணா நீல் என்பவருடன் சார்லிக்கு தன்னுடைய 54 வயதில் நடந்த திருமணமே பலவருடங்கள் மகிழ்ச்சியை தந்தது.
1943 இது நடந்தேற இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. இவரது வாழ்வில் இதுவே கடைசி திருமணம். பல இன்னல்களை சந்தித்த இவர் முதுமையில் சில காலங்கள் சந்தோசமாக வாழமுடிந்தது.
பின் சாப்ளின் 1977-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 வயதில் காலமானார். இவரது உடலை ஸ்விஸ்சர்லாந்து வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்துள்ளார்கள்.