கனடாவில் பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை
கனடா நாட்டில் பாலியல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் உள்ள எட்மோண்டன் நகரை சேர்ந்த Lyle Larsen என்ற பெயருடைய நபர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தண்டனைக் காலம் முடிவடைவதால் அவரை சிறை அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர்.
எனினும், வெளியே செல்லும் நபர் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுப்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு மையம், பள்ளி வளாகம் மற்றும் சமூக நலக்கூடங்களுக்கு செல்லக்கூடாது.
16 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் கூடும் பூங்காக்களுக்கு செல்லக்கூடாது.
16 வயதிற்கு கீழ் உள்ளவர்களிடம் வேலைக் கேட்டு செல்லக்கூடாது.
16 வயதிற்கு கீழ் உள்ள நபர்களிடம் எவ்விதமான தொழில்நுட்பம் மூலமும் தொடர்புக்கொண்டு பேசக் கூடாது.
மது மற்றும் போதை பொருளை எடுக்கக் கூடாது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டிற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நபரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
எனினும், எட்மோண்டன் நகரில் குடியிருக்கும் அந்நபர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.