மகன்களை துடிக்க துடிக்க தாக்கிய பாசக்கார தாய்: பதற வைக்கும் காரணம்
அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது இரண்டு மகன்களை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Indianapolis, Greenfield பகுதியை சேர்ந்த 36 வயதான Sascha Collins என்ற பெண்ணே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 7 மற்றும் 9 வயது சிறுவன்கள் பொலிசில் அளித்த தகவலின் படி, Sascha Collins குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வாங்கி அதை மறைத்து வைத்திருந்துள்ளார். இதை அறிந்த இரண்டு மகன்கள், தாயிக்கு தெரியாமல் பரிசை திறந்து பார்த்துள்ளனர்.
இதை தெரிந்துக்கொண்ட தாய் Sascha Collins, இருவரையும் பெல்ட்டால் அடித்து அறையின் சுவரில் தூக்கி வீசியுள்ளார். சகோதரர்களின் உடலில் காயத்தை கண்ட இளம் சகோதரி உடனே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
குழந்தைகளை தாக்கிய குற்றத்திற்காக Sascha Collinsஐ கைது செய்த பொலிசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து காவலில் வைத்துள்ளனர். ஏற்கனவே Sascha Collins மீது இரண்டு வழக்குகள் உள்ளதால், அவர் குற்றவாளி என நிரூபணமானால் 12 ஆண்டு சிறை தண்டனை சந்திக்க கூடும் என கூறப்படுகிறது.