தெறித்து சிதறிய ஸ்டெம்ப்..! இப்படி ஒரு யாக்கரை பார்த்து இருக்க மாட்டீங்க
பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷான் டைட் வீசிய ஒரு யார்க்கர் பந்து அனைவரையும் மிரள வைத்துள்ளது.
பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் நேற்று நடந்த போட்டியில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ஷான் டைட், சிட்னி அணியின் சாம் பில்லிங்ஸூக்கு யாக்கராக ஒரு பந்தை வீசினார்.
அந்த பந்தை சாம் சமாளிக்க முடியாத நிலையில், அது மிடில் ஸ்டெம்பை பதம் பார்த்தது.
அந்த ஸ்டெம்பில் வைக்கப்பட்டிருந்த மைக் எல்லாம் அப்படியே வேரோடு பிடுங்கி வீசப்பட்டது.
148 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட அந்த யார்க்கர் ரசிகர்கள் அனைவரையும் வாயை பிளக்க வைத்துவிட்டது.
இந்தப் போட்டியில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.