ஜேர்மனி தீவிரவாத தாக்குதல்! வெளியானது அதிர்ச்சியூட்டும் வீடியோ
கடந்த 19ஆம் திகதி ஜேர்மனியில் ஐஎஸ் தீவிரவாதிகள் லொறி மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி அங்கு கூடிய ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லொறி கிறிஸ்துமஸ் சந்தைக்குள் புகுந்தது.
இந்த அசுர தாக்குதலில் 12 பேர் பலியானார்கள், 50க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.
இதனிடையில் இந்த தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.
தற்போது அங்குள்ள ஒரு டிராபிக் சிக்னலில் இருந்த CCTV கமெராவில் பதிவான இந்த தாக்குதல் சம்மந்தமான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில், பயங்கர வேகத்தில் வரும் டிரக் லொறி அங்குள்ள மார்கெட் சந்தைக்குள் புகுவது போலவும், அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடுவது போலவும் உள்ளது.
இதனிடையில் லொறியில் உள்ள கைரேகைகளை ஆராய்ந்ததில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த Anis Amri (24) என்ற நபர் தான் இதை செய்தான் என கருதும் பொலிசார் அவனை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.