பியர்சன் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திருப்பட்டது.
செவ்வாய்கிழமை மாலை El Al விமானத்தில் பயணம் செய்ய புறப்பட்ட பயணிகளிற்கு பதட்டநிலை ஏற்பட்டது.விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதால் விமானி விமானத்தை திரும்ப ரொறொன்ரோ விமான நிலையத்திற்கு திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
LY30 விமானம் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை விட்டு ரெல் அவிவ் நோக்கி பிற்பகல் 5.53-ற்கு புறப்பட்டது. ஆனால் 7-மணிக்கு சிறிது பின்பாக விமானி அபாய சமிக்ஞை அழைப்பான mayday call ஒன்றை விடுத்துள்ளார்.
உரத்த தொப் என்ற சத்தம் ஒன்று கேட்டதாக பயணிகள் தெரிவித்தனர். பதட்டமடைந்தனர் பயணிகள்.
விமானம் தரையிறக்கப்பட்டது. அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
எவரும் பாதிக்கப்படவில்லை.