வங்காளதேசத்தை வென்றது இலங்கை! இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை
19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.
கொழும்பில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டவாது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றதின் மூலம் இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்காளதேச அணி சார்பில் ரயான் ரப்ஷான் 38 ஓட்டங்கள் எடுத்தார், இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரம 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.
மழை தொடர்ந்து பெய்த்தால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறது.