சமநிலையில் நிறைவடைந்த இலங்கை- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி
தென் ஆப்பிரிக்கா சுற்றுலாவின் முதலாவது 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
பொட்சேபிஸ்ட்ரூம் சென்வெஸ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 373 ஓட்டங்களை பெற்றது.
இரண்டாவது நாளின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அழைப்பு பதினொருவர் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.
போட்டியின் இறுதி நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்று கொண்டது.
இதன்படி போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
அத்தோடு இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி போட் எலிசபெத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.