இங்கிலாந்தை புரட்டியெடுத்த இந்தியா இப்போது நம்பர் 1 அணி
இங்கிலாந்தை 4-0 என்று புரட்டி எடுத்த இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2ம் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவை காட்டிலும் 15 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது.
அதே சமயம் தொடரை மோசமாக இழந்த இங்கிலாந்து அணி தோல்விக்குப் பிறகு 5ம் இடத்துக்கு சரிவடைந்துள்ளது.
இதில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணி இரண்டுமே 102 புள்ளிகள் பெற்றிருந்தாலும் தசம அடிப்படையில் பாகிஸ்தான் 3ம் இடத்தில் உள்ளது.
ஐசிசி முதலிட அணியை நிர்ணயம் செய்தவற்கான கட்-ஆஃப் திகதி ஏப்ரல் 1, 2017 ஆகும். இதில் நம்பர் 1 அணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும்.
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 5,00,000 அமெரிக்க டொலர்களும், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் டொலர்களும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 1 லட்சம் டொலர்களும் பரிசாகக் கிடைக்கும்.