விஜய்யுடன் மூன்றாவது முறை இணைந்து நடிப்பது குறித்து பேசிய காஜல் அகர்வால்
விஜய்யின் பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ். அடுத்து பிப்ரவரி மாதம் விஜய்யின் 61வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
ஆனால் காஜல் அகர்வாலிடம் கேட்டபோது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் காஜல் நடிப்பது உறுதியானால் துப்பாக்கி, ஜில்லா படத்திற்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படம் இது.