ஜோர்டான் தாக்குதலில் இளைப்பாறிய கனடிய ஆசிரியை கொல்லப்பட்டார்.மகன் காயம்
ஜோர்டானில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட கனடிய பெண் ஒரு இளைப்பாறிய ஆசிரியை என்பது தெரிவந்துள்ளது.
நியு பவுன்லாந்தை சேர்ந்த 62-வயதான லின்டா வெச்சர் ஆவார். கொல்லப்பட்ட 10பேர்களில் ஓரே ஓரு வெளிநாட்டவர் இவராவார்.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சிலுவைப்போர் கோட்டை சுற்றுலா பிரசித்தி பெற்ற இடமாகும்.
வெச்சரின் மகன் உட்பட 34-பேர்கள் காயமடைந்துள்ளனர்.
இளைப்பாறிய ஆசரியையான இவர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் மகன் கிறிஸ் வெச்சரிடம் விடுமுறைக்கு சென்றிருந்து சமயம் சம்பவம் நடந்துள்ளது.
இவரது மகன் டுபாயில் இலக்கண பாடசாலை ஒன்றில் 9-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிகின்றார்.
இவரது மரணத்தால் அயலவர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.