சுவிஸில் பரபரப்பு! சூரிச் மசூதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள மசூதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றுள்ள சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Militaerstrasse, Eisgasse தெருவில் உள்ள மசூதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி எந்திய மர்ம நபர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் மசூதிக்கு உள்ளே இடம்பெற்றதா? வெளியே நடத்தப்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய நபர் சம்பவயிடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதி பொலிசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்க்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, தப்பிச்சென்றுள்ள குற்றவாளியை கண்டறிய பெரியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற துப்பாக்கி ஏந்திய தாக்குதல்கள் அரிது என்பதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.