கனடிய சுற்றறுலா பயணி உட்பட நான்கு பொலிசார் சுட்டு கொலை!
AMMAN-ஜோர்டானில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு கனடிய சுற்றுலா பயணி ஆகியோர் ஞாயிற்றுகிழமை இடம்பெறற துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கராக் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றபோது தாக்கியவர்கள் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோடானில் நாடு தளுவிய எந்தவித அறிவுறுத்தல்களும் நடைமுறையில் இல்லை எனவும் ஆனால் கனடியர்கள் உள்நாட்டில் அமைதியின்மை குறித்து உயர் மட்ட எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடா உலக விவகார இணையத்தளம் கூறுகின்றது.
கொல்லப்பட்ட பெண் கனடாவிலிருந்து சென்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிட்டர்ஸ் மற்றும் லோக்கல் ஊடகங்களின் பிரகாரம் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸ் மற்றும் ஏனைய சுற்றுலா பயணிகள் கோட்டைக்குள்ளே நான்கு அல்லது 6 துப்பாக்கிதாரர்களுடன் சிக்கி கொண்டிருக்கலாம் என நம்பபடுகின்றது.
தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நகரின் சிலுவைப்போர்-சகாப்த கோட்டையை சுற்றி இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட 14 சுற்றுலா பயணிகள் கோட்டைக்குள் அகப்பட்டுள்ளதாகவும் இவர்களை துப்பாக்கி தாரிகள் பணய கைதிகளாக வைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.