துருவ சுழல் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு வீடு செல்கின்றது’ ஆனால் வார இறுதியில் பொல்லாத வானிலை தாக்கும்!
கனடாவின் பெரும்பாகத்தை கொடிய குளிர் காலநிலை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சில நல்ல செய்திகளும் ஏற்படும் என கனடாவின் மூத்த தட்பவெட்ப அறிவியலாளர் டேவ் பிலிப்ஸ் சனிக்கிழமை தெரிவித்தார். நாட்டின் மேற்கு பகுதிகளில் இரண்டு வாரங்களாகவும் கிழக்கில் ஒரு வாரமாகவும் அலைக்கழித்து கொண்டிருந்து துருவ சுழலானது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு வீடு செல்கின்றதெனவும் அவர் கூறினார்.
ஆனால் ஆழமான பனி உறைவு அல்லது மிகுந்த குளிர் காலநிலையை கனடா இன்னமும் காணவில்லை. பெரும்பாலான கனடியர்களிற்கு சனிக்கிழமை மற்றொரு குளிர மிகுந்த நாளாக காணப்படும்.
அல்பேர்ட்டா, சஸ்கற்சுவான், மனிரோபா மற்றும் நியு பிறவுன்ஸ்விக் ஆகிய மாகாணங்களிற்கு அதிதீவிர குளிர் காலநிலையை கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது.
சதுப்பு நிலங்களில் காற்றுடன் கூடிய குளிரானது தசையை ஐந்து அல்லது 10நிமிடங்களில் உறைய வைத்து விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பத்து வருடங்களில் மிகவும் குளிரான காலநிலை நியு பிறவுன்ஸ்விக்கை இம்முறை தாக்கியுள்ளது.
காற்றுடன் கூடிய குளிர் வெப்பநிலை -30ற்கு இந்த வார இறுதி நாட்களில் காணப்படும்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகள். கியுபெக் மற்றும் ஒன்ராறியோவின் வடபகுதிகளிற்கு அதிதீவிர குளிர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் ஒன்ராறியோவின் தென்பகுதியில் 15முதல்20சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு ஏற்படும்.
ரொறொன்ரோ பகுதிகளில் ஐந்திற்கும் 10 சென்ரிமீற்றர்களிற்கும் இடைப்பட்ட அளவிலான பனி பெய்யும் எனவும் பனி உறைபனி மழையாக மாறலாம் எனவும் வெப்பநிலை உறையும் தன்மைக்கு மேல் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.