இன்ஸ்டாகிராம் தரும் அதிரடி வசதி: இனி எந்த போஸ்ட்டையும் மிஸ் பண்ணமாட்டீங்க!
புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் சேவையை வழங்கும் இன்ஸ்டாகிராம் ஆனது பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இச் சேவையில் புகைப்பட போஸ்ட்களை மீண்டும் பார்க்கக்கூடிய வசதியோ அல்லது வாய்ப்போ இதுவரை தரப்படவில்லை.
இதனால் அதிகளவான போஸ்ட்களை தவற விடவேண்டிய நிலையே காணப்பட்டு வந்தது.
இப் பிரச்சினைக்கு தீர்வாக தற்போது புக்மார்க் வசதி இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புகைப்படங்களின் கீழாகவும் புக்மார்க் ஐகான் தரப்பட்டுள்ளது. இதனைக் கிளிக் செய்து புக்மார்க் செய்துகொள்ளலாம்.
தேவைப்படின் பின்னர் அல்லது மீண்டும் மீண்டும் குறித்த போஸ்ட் ஒன்றினை பார்த்து மகிழ முடியும்.
இவ் வசதியினை அன்ரோயிட் மற்றும் iOS அப்பிளிக்கேஷன்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை இவ்விரு இயங்குதளங்களுக்குமான இன்ஸ்டாகிராமின் 10.2 எனும் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.