தவிர்க்க முடியாத உலக அழிவு..! தயாரான நிலையில் அணு ஆயுதங்கள்..!!
பல முறை உலக அழிவு பொய்த்துப்போனதால் அதனைப்பற்றி வெளிவரும் செய்திகளையும் பலர் நம்புவதில்லை. என்றாலும் அன்றாடம் பல செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நிலையில் உலகத்தின் இறுதிநாள் குறிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றது. அதன் படி 2017ஆம் வருடத்தோடு உலகம் முடிவை சந்திக்கும் என ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
இப்போதைய உலக நிலவரம், அணுஆயுதங்களின் அதிகரிப்பு, கத்தோலிக்க மதக் கருத்துகள் மற்றும் 16ஆம் நூற்றாண்டின் தத்துவ ஞானி நாஸ்டராமஸ் கூறிய எதிர்வு கூறல் இவை அனைத்தும் 2017 உலக முடிவோடு தொடர்பு பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்காலத்தை பற்றி கணித்து கூறிய ஒருவர் தான் நாஸ்டராமஸ். இவரை சோதிடர் என்று ஒரு சிலரும் இன்னும் பலர் தத்துவ ஞானியுமாகவே வர்ணித்து வருகின்றனர்.
இவர் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் எப்படி இவருக்கு இந்த அபூர்வ எதிர்வுகூறல் சக்தி கிடைத்தது என்பது தொடர்பில் யாருக்கும் கூற முடியவில்லை. ஆனாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது இவர் அற்புத ஆற்றல் மிக்கவர் என்பதே.
இப்போது உலக அழிவு தொடர்பிலான பீதி கலந்த செய்திகளோடு இவருடைய பெயரும் அதிகமாக மேற்குலக ஊடகங்களில் பரவிவருகின்றது. காரணம் அவர் என்றோ கூறியவை அடுத்தடுத்தது பலித்து கொண்டு வருகின்றது.
ஒபாமாவின் தோல்வி டொனால்ட் ட்ரம்பின் வெற்றி போன்ற குறிப்பிட்ட சிலவகை ஏற்கனவே ஊடகங்களில் பரவலாக வெளிவந்திருந்தது.
2016ஆம் வருட இறுதி முதல் பேய் மழை பெய்யும் உலகம் முழுதும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும், பல பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படும் காலநிலை முற்றாக மாறிவிடும்.
இவை அவர் கூறிய எதிர்வு கூறல், அவர் கூறியதைப்போன்றே இப்போது நிறைவேறி வருகின்றது. உண்மையில் அவர் கூறியதை விடவும் பயங்கரமான வகையிலேயே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டது.
அது மட்டுமல்லாது கண்ட நகர்வுகள் பற்றியும் துருவப் பகுதிகள் உருகும் என்பதும் 2016 தொடக்கம் ஆரம்பிக்கும் என்றும் இவர் கூறியவை கூட மாற்றங்கள் இன்றி நடந்து வருகின்றது.
அடுத்து 2017 முதல் முன்றாம் உலகப்போர் தொடர்பில் வல்லரசு நாடுகள் செயற்படத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது 2016 முதல் அமெரிக்கா பலம் இழக்கும் சீனா மற்றும் ரஷ்யா கை உயர்வடைவதோடு அவை போரைத் தொடங்கும் என்றும் நாஸ்டராமஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இதனை நம்பவில்லை ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா தனது பலம் குறைந்து விட்டது. அத்தோடு பல நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு அணு ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
2016ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் படி தற்போது 15350 அணு ஆயுதங்கள் உலகில் தாக்குதலுக்கு தயாராக இருக்கின்றது. இவற்றில் அமெரிக்காவிடம் 6970, ரஷ்யாவிடம் 7300, பிரான்ஸ்சிடம் 300, சீனாவிடம் 260 குறிப்பிட்டு கூறத்தக்கன.
இதனைத் தவிர பல நாடுகளும் அணு ஆயுதங்களில் தயார் நிலையிலேயே வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்படி இத்தனை அணு ஆயுதங்கள் எதற்காக 10 குண்டுகளையே உலகம் தாங்குமா என்ற நிலையில் இத்தனை ஆயுதங்கள் அவசியம் தானா?
மறுபக்கம் கொரியாவும் தன் பங்கிற்கு வெளிப்படையாகவே போர் அறை கூவல்களை விடுத்து கொண்டு தான் இருக்கின்றது. அமெரிக்காவும் கூட உலகம் முழுதும் தமது கடல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டு வருகின்றது.
ஆக மொத்தம் வல்லரசுகள் தாக்குதலுக்கு தயார் ஆகின்றன, இதனை நாஸ்டராமஸ் கூற்றுபடி பார்த்தால் மத்திய கிழக்கு பற்றி எரியும், அது அடுத்த உலக யுத்தத்திற்கு வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகத்தை அழிக்க ஆட்டிப்படைக்க அமெரிக்கா திட்டமிட்டு செயற்படும் என்பதும் கூட இப்போது நடை பெற்று கொண்டிருக்கின்றது.
மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா இந்த போர் விளையாட்டை ஆரம்பிக்கும். ஈராக், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்கனவே போய் விட்டது.
இப்போதைக்கு அது நடந்து விட்டது மத்திய கிழக்கு மட்டும் அல்ல எங்கே எப்போது தாக்குதல்கள் இடம்பெறும் என்பது தெரியாத சூழ்நிலையே உலக அளவில் தொடர்கின்றது.
இங்கு நாஸ்ட்ராமஸ் கூறியதா இல்லயா என்பதை விட நடந்து வரும் இவை நிச்சயமாக உலகமே மாற்றமடையும் என்ற கூற்றினை வலுப்படுத்திக் கொண்டு இருப்பதாக பீதிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை கத்தோலிக்க மதம் சார்ந்த போதனையாளர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தியுள்ளனர். 2017ஆம் வருடம் ஏற்படும் பாரிய சூரிய கிரகணம் உலக முடிவிற்கு காரணமாக அமையும் என்று தெரிவித்துள்ளதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன் படி 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதியுடன் உலகம் முடிவை அடையவுள்ளது என கிறிஸ்தவ உலக குழுக்கள் தெரிவித்துள்ளது.
மேலும்,குறித்த நேரத்தில் முழு சூரிய கிரகணம் அமெரிக்கா முழுவதும் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முடிவை அடையும் போது மேற்கு ஐரோப்பாவில் வைத்து இருளடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை நாசாவும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக தகவல்கள் மேற்குலக ஊடகங்களில் அதிகமாக வெளிவந்த வண்ணமே இருக்கின்றது. எவ்வாறாயினும் இப்போது உலகம் பயணிக்கும் பாதை அழிவை நோக்கியதாக மட்டுமே காணப்படுகின்றது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம் தான்.