8-வது வெற்றியை பதிவு செய்த விஜேந்தர் சிங்!
இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், முன்னாள் உலக சாம்பியனான பிரான்சிஸ் செகாவை நாக் – அவுட் முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிய பசிபிக் குத்துச்சண்டை போட்டியில் தான்சானியாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் பிரான்சிஸ் செகாவும், விஜேந்தர் சிங்கும் மோதினர்.
மொத்தம் பத்து சுற்றுகள் கொண்ட போட்டியில் வெறும் 3 சுற்றுகளில் விஜேந்தர் வெற்றி வாகையை சூடினார்.
நாக் அவுட் முறையில் செக்காவை வீழ்த்தும் விஜேந்தருக்கு இந்த வெற்றி வர்த்தக ரீதியில் தொடர்ந்து பெற்ற 8வது வெற்றியாகும்.
வெற்றி பெற்ற பின் பேசிய விஜேந்தர், செக்கா அதிகம் பேசவே விரும்பினார், ஆனால் நான் எனது குத்து (Punch) ஒவ்வொன்றும் பேச வேண்டுமென்று விரும்பினேன் என்றார்.
மேலும் ஊக்கமளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். போட்டியை காணவந்த அனைத்து ரசிகர்களுக்கும் விஜேந்தர் நன்றி தெரிவித்தார்.