மொயின் அலியின் அபார ஆட்டத்தால் 477 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து
இந்தியா – இங்கிலாந்து அணி 5வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 146 ஓட்டங்கள் எடுத்தார்.
அத்தோடு ஜே ரூட் 88 ஓட்டங்களையும், லயம் டவ்சன் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும், ராஸிட் 60 ஓட்டங்களையும் , ஜானி பேர்ஸ்டோவ் 49 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இந்தியா அணி சார்பாக ஜடேஜா 3 விக்கட்டுகளையும், யாதவ், சர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் அஸ்வின், மிஸ்ரா தலா 1 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.