சாய்னாவுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு: ரசிகர்களின் கோபத்துக்கு காரணம் என்ன?
சீன நிறுவனத்துடன் கைகோர்த்த சாய்னாவுக்கு பேஸ்புக், டுவிட்டர் வாயிலாக ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அந்த செல்போனுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சீன நிறுவனத்துடன் கைகோர்த்த சாய்னாவுக்கு பேஸ்புக், டுவிட்டர் வாயிலாக ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
‘சாய்னா தயவு செய்து சீன பொருட்களை பிரபலப்படுத்தும் ஒப்பந்தத்தில் இணையாதீர். இது நமது தேசத்திற்கே ஆபத்தானது’ என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு ரசிகர், ‘நான் உங்களது தீவிர ரசிகன் தான். ஆனால் சீன தயாரிப்பு பொருளை வாங்குங்கள் என்று நீங்கள் சொன்னால் அதை செய்ய மாட்டேன். நீங்களும் இந்த முட்டாள் தனமான காரியத்தை செய்யாதீர்’ என்று கூறியுள்ளார். இப்படி பல ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.