கௌரவமாக தலைமை பதவியில் இருந்து விலகினார் டிவில்லியர்ஸ்
தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணித்தலைவர் டிவில்லியர்ஸ், உடனடியாக அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அணித்தலைவராக இருந்த டிவில்லியர்ஸ் கடைசியாக ஜீனில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்.
பின்னர் சமீபகாலமாக மூட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுவந்த டிவில்லியர்ஸ், கடைசியாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
தற்போது இவர் இன்னும் முழுமையாக காயத்தில் இருந்து மீளாத நிலையில், இந்த முடிவை தானாக முன்வந்து எடுத்துள்ளார்.
தற்போதைய டெஸ்ட் இடைக்கால அணித்தலைவராகவுள்ள டுபிளசியே முழுநேரமாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து டிவில்லியர்ஸ் கூறுகையில், அணியின் விருப்பம் என்பதே, ஒரு தனிநபரின் விருப்பத்தை விட பலமானதாக இருக்கும். இத்தனை நாட்கள் அணித்தலைவர் பொறுப்பில் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இத்தனை நாட்களில் நான் இரண்டு தொடர்களை தவறவிட்டுவிட்டேன்.
அடுத்த தொடர்களுக்கும் எனது பங்களிப்பு என்பது இருக்குமா என்பது சந்தேகம் தான். அவுஸ்திரேலிய தொடரில் டுபிளசி எப்படி செயல்பட்டார் என்பதை இந்த உலகமே பார்த்தது. அதனால் அவரே தொடர்ந்து அணித்தலைவராக செயல்படவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.
அத்தோடு அவுஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே டுபிளசி தலைமையிலான அணி இரண்டு தொடரையும் வென்றுள்ளது.