2.5மில்லியன் டொலர்கள் பெறுமதியான போலி பொருட்கள் பறிமுதல்.பொது மக்களை எச்சரிக்கும் பொலிசார்!
கனடா-ரொறொன்ரோ எற்றோபிக்கோவை சேர்ந்த இறக்குமதிஏற்றுமதி வர்த்தகர் 2.5மில்லியன் டொலர்கள் பெறுமதியான போலிப்பொருட்களை வைத்திருந்தமை பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. போலியான பொம்மைகள், முக ஒப்பனை பொருட்கள், கருப்பு கண்ணாடிகள், வீட்டு உபகரணங்கள், வேறுபல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பல மக்கள் பொலிசாருடன் தொடர்பு கொண்டு தாங்கள் வாங்கிய முக ஒப்பனை பொருட்களை உபயோகித்ததால் தோலில் சொறி மற்றம் பிற பிரச்சனைகள் ஏற்பட்டதாக முறையிட்டுள்ளனர்.
தாங்கள் வாங்கிய பற்றறியில் இயங்கும் உபகரணங்கள் அதிக வெப்பமடைவதாகவும் பழுதடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இப்பொருட்கள் எங்கு வாங்கப்பட்டன என்பதை கண்காணித்த பொலிசார் நகர் பூராகவும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
யங் வீதி மற்றும் செப்பேர்ட் அவெனியு மேற்கில் அமைந்துள்ள hotel ஒன்றின் நிலக்கீழ் பகுதியில் இ ப்பொருட்கள் வைத்திருந்ததை பொலிசார் கண்டு பிடித்தனர்.
இன்னுமொரு சோதனை லக்கி இறக்குமதி மற்றும் மொத்தவிற்பனை நிலையத்தில்-எற்றோபிக்கோவில் 1607 The Queenswayயில் நடாத்தப்பட்டது.16டிரக்டர் டிரெயிலர் நிறைந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மூவர் கைது செய்யப்பட்டனர். இருவர் குடியேற்ற விதிகளை மீறியமைக்காக.
பொலிசார் பொருட்களை சோதனை செய்த போது விளையாட்டு பொருட்கள் உடையக்கூடியனவாகவும், கம்பியில்லாத காதணிகள் உபயோகத்திலிருக்கும் போது அதிகமான சூடு பிடிக்ககூடியனவாகவும் உருகும் தன்மையுடையனவாகவும் இருக்க கண்டுபிடித்தனர்.
இது போன்ற பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
Lucky’s Import and Wholesale நிறுவனத்தின் சொந்தகாரர் 46-வயதுடைய மிசிசாகாவை சேர்ந்த கொக் சான் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டார்.
மற்றய இருவரும் நாடுகடத்தப்படலாம் என நம்பபடுகின்றது.
நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிசார் எச்சரிக்கின்றனர்.