ரொனால்டோவை ஓரங்கட்டிய மெஸ்ஸி! ரியல் மாட்ரிட் முதலிடம்
கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா தொடரில் பார்சிலோனா வீரர் மெஸ்ஸி அதிக கோல் அடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிசோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் அவர் 11 கோல்களுடன் அதிக கோல் அடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மெஸ்ஸியை தொடர்ந்து ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ, பார்சிலோனா வீரர் லுாயிஸ் சாரஸ், செல்டா விகோ வீரர் இயகோ அஸ்பாஸ் தலா 10 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
அதே சமயம் ரியல் மாட்ரிட் அணி 11 வெற்றி, 4 டிரா என 37 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
பார்சிலோனா அணி 31 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், செவில்லா அணி 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.