அவுஸ்திரேலிய பயிற்சியாளரால் இலங்கைக்கு காத்திருக்கும் கடும் சவால்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கான பயிற்சியாளராக ஜெஸ்டின் லங்கர் செயல்படவுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலியவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இலங்கையுடனான டி20 தொடருக்கு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜெஸ்டின் லங்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த யூன் மாதம் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடனான முக்கோண ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி சிறந்த முறையில் செயற்பட்டு தொடரை வென்றது.
இதற்கு முக்கிய காரணம் தலைமை பயிற்சியாளர் ஜெஸ்டின் லங்கரே என்பது நினைவுக்கூரத்தக்கது.
இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இத்தொடர் இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது