23 முறை 5 விக்கெட்! கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் கபில்தேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னங்சில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 23 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற கபில்தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.
முன்னதாக கும்ப்ளே 36 முறையும், ஹர்பஜன் சிங் 25 முறையும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
இன்னும் இரண்டு முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால் ஹர்பஜன் சாதனையை அஸ்வின் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.