உலக தமிழரின் ஓர் அடையாளம்! பல மில்லியன் மக்களின் கண்ணீருடன் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணம்..! நேரடி பதிவுகள்
![_92846657_mediaitem92846626](http://www.easy24news.com/wp-content/uploads/2016/12/92846657_mediaitem92846626-300x169.jpg)
முன்னாள் முதல்வர் காமராஜன், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.ஆர் இவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது தமிழகத்தில் கூடி வந்த மக்களின் தொகையை விட ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை சாதனை படைத்திருந்தது.
பல மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களின் கண்ணீர் ஊர்வலத்துடன் முதல்வர் ஜெயலலிதா இந்த உலகில் இருந்து முழுமையாக விடை கொடுக்கும் தருணம் இது.
மெரீனா கடற்கரையில் உலகிலுள்ள பல மில்லியன் மக்களின் கண்ணீருடக்கு மத்தியில் மீளாத் துயில் கொள்ளுகின்றார் முதல்வர்.
அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் ஜெயலலிதாவின் பூத உடல் ஏற்றப்பட்டு அண்ணாசாலை, வாலஜா சாலை வழியாக மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு வரப்பட்டு, மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் சமாதிக்கு அருகில் வரலாறு காணாத மக்களின் கண்ணீருடன் புதைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஹெலிகொப்டர்கள் மூலமாக அம்மாவின் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டதுடன், சுமார் 3,000 துணை இராணுவப் படையினர் இறுதி ஊர்வலப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
2 கிலோ மீற்றர் தூரம்தான் இந்த மரீனா கடற்கரைக்கும் அம்மா வீட்டிற்கும் உள்ள தூரம். ஜெயலலிதாவின் சீறிப்பாயும் வண்டியில் சென்றால் 5 நிமிட தூரமே. ஆனால் இன்று ஜெயலலிதா இந்த உலகை விட்டு செல்லும் இந்த பயணமானது மிக நீண்ட பயணமாகவே காணப்பட்டது.
வீதியில் செல்லும் போதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் இவருக்கு மலராக தூவப்பட்டுள்ளன.
இந்த ஊர்வலத்ததை பார்ப்பதற்கும், இதில் கலந்து கொள்வதற்கும் தமிழகத்தில் குவிந்த மக்களின் எண்ணிக்கை வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
You may like this…