ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் பனிபொழிவு. மழை
கனடா- பனிகலவை ஒன்று, பறக்கும் பனி மழை மற்றும் ஆலங்கட்டி மழை கலந்து ரொறொன்ரோவின் வடக்கு மற்றும்ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பகுதிகளில் வழுக்கலான நிலைமையை திங்கள்கிழமை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுகிழமை கனடா சுற்றுசூழல் ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு இரவு பனிபொழிவு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த அறிக்கை திங்கள்கிழமை அதிகாலை 5.30மணிக்கு முன்னராக நிறுத்தப்பட்டது.
வானிலை அமைப்பின் மழை குறித்த சுமத்தலில் இருந்து ரொறொன்ரோ தப்பிவிட்டது ஆனால் ஏனைய பகுதிகள் பனி மற்றும் பறக்கும் பனியினை சமாளிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாயின.
சில பகுதிகளில் ஐந்து சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவு ஏற்பட்டது. மற்றய பகுதிகளில் 10 சென்ரி மீற்றர்கள் பனிபொழிந்;துள்ளது.
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் ஈரமான வெப்பநிலை இன்னமும் முடியவில்லை செவ்வாய்கிழமை பிற்பகல் மழைபெய்யும்.