இப்படியும் நடக்குமா? பிரசவத்தின் பின்னர் மரணமடைந்த தாய்.
கனடா-கியுபெக்கில் சனிக்கிழமை ஒரு பொது ஞாபகார்த்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது. Éloïse Dupuis என்பவரை கௌரவப் படுத்துவதற்காக இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
26-வயதுடைய Dupuis, அக்டோபர் நடுப்பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்தார்.ஆனால் ஆறு நாட்களின் பின்னர் இரத்தம் ஏற்ற மறுத்ததால் மரணமடைந்தார். காரணம் இவர் ஒரு யெகோவாவின் சாட்சியாளராவார். கியுபெக் மாகாணத்தில் குழந்தை பிரசவிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மரணமடைந்த இரண்டாவது யெகோவாவின் சாட்சியாளர் இவராவார்.
யெகோவாவின் சாட்சியாளர்கள் இரத்த ஏற்றத்தை அனுமதிக்க மாட்டார்கள். கியுபெக் மரணவிசாரனை அதிகாரி இவரது மரணம் குறித்து புலன்விசாரனை நடாத்துவதோடு இவரது மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ள அனுமதி தரத்தை சந்திக்கின்றதா எனவும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை யெகோவாவின் சாட்சி தொடர்பு ஆலோசனை குழு இரத்தம் ஏற்றுவதை அனுமதிக்கவேண்டாம் என Dupuis, யிடம் தெரிவிக்குமாறு அவரது சித்தியை வற்புறுத்தியது குறித்தும் விசாரனை நடாத்துகின்றனர்.