வெள்ளத்தினால் நெடுஞ்சாலை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து தடை
கனடா-பிரிட்டிஷ் கொலம்பியாவில் நெடுஞ்சாலை 4- Tofino மற்றும் Uclueletஆகிய பகுதிகளை வன்கூவர் ஐலன்டின் மற்றய பகுதிகளுடன் இணைக்கும் பாதை வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மூடப்பட்டுள்ளது. பாதை உடைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இரு பாதை போக்குவரத்துக்களும் மூடப்பட்டன.
பெரு மழை காரணமாக பாரிய நிகழ்வுகள் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. பூகம்பம் அல்லது பாரிய பேரழிவுகள் கூட ஏற்படலாம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.