கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 170 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
குறித்த நாட்களில் 497,223 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக பயணித்துள்ளன.
அதேவேளை, இம்மாதம் 11 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணித்துள்ளன.
அன்றைய தினம் அதிவேக நெடுஞ்சாலைகளில் 163,541 வாகனங்கள் பயணம் செய்துள்ள நிலையில் 54,666,450 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.