இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (01.03.2025) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தாதியர்களின் சேவைகளுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் குறித்தும் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.
அடிப்படை சம்பளம்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “இலங்கையில் சுமார் 8,200 தாதியர்கள் பணிபுரிகின்றனர்.

தாதியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.32,525 ரூபாய் ஆகும். அந்த தொகையை ரூ. 54,920 ஆக நாங்கள் அதிகரித்தோம்.
ஒரு மணி நேரத்திற்கு 215 ரூபாயாக இருந்த அவர்களின் மேலதிக நேர கொடுப்பனவவை 75 ரூபாய் அதிகரித்து 290 ரூபாயாக உயர்வடையும்.
முதல் நியமனம்
ரூ.1,084 ஆக இருந்த தினசரி சம்பளம் ரூ.1,831 ஆக அதிகரிக்கப்படுவதுடன், முதல் நியமனம் பெற்ற பிறகு 5 வருடங்கள் வேலை செய்பவர்கள் பற்றியே தெரிவிக்கிறேன்.
மேலும், ஏப்ரல் முதல் அவர்களுக்கு குறைந்தபட்ச மொத்த சம்பளம் 133,640 ஆகும். அதேநேரம் 9,400 இரண்டாம் நிலை தாதியர்கள் உள்ளனர்.

அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.37,636. இது ரூ.64,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அடிப்படை சம்பளம் மட்டும் ரூ.26,864 உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு ஒரு மணி நேரத்திற்கு ரூ.255 ஆக இருந்த OT கட்டணம் ரூ.90 அதிகரித்து ரூ.345 ஆக உயர்த்தப்படும். ரூ.1881 ஆக இருந்த தினசரி கொடுப்பனவு ரூ.2150 ஆக உயர்த்தப்படும். பின்னர் அவர்களின் மொத்த சம்பளம் கணிசமாக அதிகரிக்கப்படும்.
முதல் வகுப்பில் 16,000 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களின் தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.44,965. இந்த அடிப்படை சம்பளம் ரூ.77,850 ஆக அதிகரிக்கப்படும்.
நீண்ட வரிசையில் மக்கள்…! நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டு அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தினசரி கொடுப்பனவு
அதாவது அடிப்படை சம்பளத்தில் 32,885 அதிகரிக்கப்படும். இப்போது, ஒரு மணி நேர OT 305 ரூபாயாக உள்ளது, இது 420 ரூபாயாக அதிகரிக்கும். ரூ.2248 ஆக இருந்த தினசரி கொடுப்பனவு ரூ.2595 ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை 6,000 உயர் தகுதி வாய்ந்த தாதியர்கள் தற்போது சேவையில் உள்ளனர். இந்த நபர்கள் 22 வருட சேவைக்குப் பிறகுதான் பதவி உயர்வு பெறுகிறார்கள்.
தற்போதைய அடிப்படை சம்பளம் 53,035, ரூபாவாகும் இது ரூ.92,460 ஆக உயரும். ரூ.350 செலவாகும் ஒரு OT மணி நேரம் ரூ.500 ஆகிறது. ரூ.2,651 ஆக இருந்த தினசரி உதவித்தொகை ரூ.3,082 ஆக அதிகரிக்கப்படும்.
மேலும், இலங்கையில் தற்போது சுமார் 415 சிறப்பு தர தாதியர்கள் உள்ளனர். சுமார் 27 வருட சேவைக்குப் பிறகு இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. இவர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 54,235 வாகும் இது ரூ.94,060 ஆக அதிகரிக்கப்படும்.
அவர்களுக்கான ஒரு மணி நேரத்திற்கு ரூ.395 ஆக இருக்கும் தொகை ரூ.545 ஆக அதிகரிக்கப்படுவதுடன் தினசரி கொடுப்பனவு ரூ.2,711 லிருந்து ரூ.3,135 ஆக அதிகரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.