பிபிஎல் தொடரில் வங்கதேச வீரர் அட்டூழியம்: விக்கெட் கீப்பரை மட்டையால் அடிக்க முயன்ற பரிதாபம்!
பிபிஎல் தொடரில் வங்கதேச வீரர் சபீர்ரஹ்மான், ஆப்கானிஸ்தான் வீரர் சாசாத்தை மட்டையை வைத்து அடிக்க முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போன்று, பிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இத்தொடரில் Rangpur Riders அணியும் Rajshahi Kings அணியும் மோதின. இப்போட்டியின் Rangpur Riders அணி சார்பில் நான்காவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ரூபில் வீசுவதற்கு தயாராக இருந்தார்.
அப்போது களத்தில் இறங்கிய Rajshahi Kings அணியின் மட்டையாளரான சபீர்ரஹ்மான் திடீரென்று எதிரணியின் விக்கெட் கீப்பரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவருமான மொகமத் சாசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின் வார்த்தை போர் முற்றியதால், ஒரு கட்டத்தில் சபீர்ரஹ்மான் தான் வைத்திருந்த மட்டையால் அவரை தாக்க முயற்சி செய்தார். அதன் பின்னர் அருகில் இருந்த வீரர்கள் அவரை தடுத்ததால் அவர் பின் வாங்கப்பட்டார்.
மேலும் இது குறித்து இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.