மாதவன்-விஜய்சேதுபதி நடிக்கும் ‘விக்ரம் வேதா’
தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதி சுற்று ஆகிய படங்களை தயாரித்த சசிகாந்த் அடுத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, ‘விக்ரம் வேதா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. புஷ்கர்-காயத்ரி டைரக்டு செய்கிறார்கள்.
இதில், மாதவன்-விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் கதிர், வரலட்சுமி, ஷரதா ஸ்ரீநாத் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். மணிகண்டன் வசனம் எழுதியிருக்கிறார்.
அதிரடி சண்டை காட்சிகளுடன் திகில் நிறைந்த படமாக இது தயாராகிறது. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.