மக்டொனால்டின் Big Mac சான்ட்விச்சின் சிருஷ்டி கர்த்தா காலமானார்.
யு.எஸ்.-பிற்ஸ்பேர்க்-இவரின் பெயர் உங்களிற்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் இவரின் படைப்பை அனைவரும் விரும்பி உண்பது நிஜம். ஒரு எள் கொண்ட பாணில் முழுமையான-மாட்டிறைச்சி பற்றிஸ்கள் இரண்டு, விசேடமான சாஸ், லெட்டுஸ், சீஸ், பிக்கில்ஸ், வெங்காயம் போன்றனவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட சான்விச் உலகம் பூராகவும் அனைவரும் விரும்பி உண்ணும் சான்ட்விச்சாகும்.
50வருடங்களிற்கு முன்னர் மைக்கல் ஜேம்ஸ் Big Mac உருவாக்கினார். இது உலகம் பூராகவும் மிக சிறந்த துரித-உணவு சான்ட்விச் என காலப்போக்கில் அறியப்பட்டது. இதனை உருவாக்கிய ஜிம் டெலிகற்றி எனப்படும் மைக்கல் ஜேம்ஸ் தனது 98வது வயதில் அவரது பிற்ஸ்பேக் இல்லத்தில் காலமானார்.
வாடிக்கையாளர்கள் பெரிய அளவிலான சான்ட்விச்சை விரும்பியதனால் 1967ல் மக்டொனால் தொடரின் பிரதான பேர்கரை உருவாக்கினார். டெலிகெற்றிசின் சான்ட்விச்சின் தேவை அதிகரித்ததால் எங்கும் பரவி 1968ல் மக்டொனால்ட் தொடரின் தேசிய மெனுவில் இடம் பெற்றது.
அன்று முதல் மக்டொனால்டின் Big Mac பில்லியன் எண்ணிக்கையில் 100ற்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகியது.
வருடமொன்றிற்கு தோராயமாக ஒவ்வொரு 17விநாடிகளில் 550-மில்லியன் Big Macs விற்பனையாகின்றதென தெரிவிக்கப் பட்டுள்ளது.
டெலிகற்றி தனது முதலாவது மக்டொனால்டை 1957ல் பிற்ஸ்பேக்கின் நோத் ஹில் புறநகர் பகுதியில் ஆரம்பித்தார்.