கொதிக்கும் சாம்பாரில் விழுந்து துடிதுடித்த குழந்தை: நடந்த விபரீத சம்பவம்
மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரின் விஜயநகரில் உள்ள ஒரு ஹொட்டலில் கவிதா என்பவர் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வருகிறது.
இவரது, 3 வயது குழந்தை கிருஷ்ணாவை பார்ப்பதற்கு வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், தினமும் ஹொட்டலுக்கு அழைத்து சென்றுவிடுவார்.
சம்பவம் நடைபெற்ற அன்று, ஹொட்டலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, சமையலறையில் ஸ்டவ் அருகே சென்றுள்ளது. கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் விழுந்து துடிதுடித்தது.
இதனைத்தொடர்ந்து, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் உடல் பாகங்கள் அதிகமாக வெந்துபோனதால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இந்நிலையில், ஹொட்டல் உரிமையாளர் இறந்த குழந்தைக்கு இழப்பீடு தருவதாக கூறியுள்ளார்.