மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை பொலிஸார் மற்றும் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, தனியார் நிறுவனத்திலிருந்த பல்வேறு சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.