தன் சாதனையை தானே முறியடித்த இளையதளபதி விஜய்
இளையதளபதி விஜய்யின் தெறி படத்தின் டீஸர் இந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாகி இருந்தது. தற்போது 10 மாதங்களை கடந்து இந்த டீஸர் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.
தற்போது பைரவா படத்தின் டீஸர் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெளியாகி இருந்தது. டீஸர் வெளியாகி இதற்குள் 1 கோடி பார்வையாளர்களுக்கு மேல் பெற்றிருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் சாதனையை அவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று புகழ்ந்து பேசி வருகின்றனர்.
பைரவா படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது.