இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வில்லனாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடிக்கிறார். படப்பிடிப்பு பல்கேரியாவில் நடக்கிறது. அங்குள்ள பனிக்குகைகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இம்மாதம் இறுதி வரை அங்கு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடையும். ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அஜித்குமார் நடித்த படங்களிலேயே படுபயங்கரமான சண்டை காட்சிகள் நிறைந்த படம் இது. அவர் இதுவரை நடித்திராத துணிச்சலான காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன. அந்த காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.
வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் இணை தயாரிப்பு: செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்.