பாலு மகேந்திரா நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு பயணத்தை முன்னிட்டு ‘எங்கட கதைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (05.10.2024) கிளிநொச்சியில் நடைபெற்றது.
நிறுவனத் தலைவர் கம்சாயினி ஜனார்த்தனன் தலைமையில் நடந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளீதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ். கலைச்செல்வி அவர்களும் கௌரவ விருந்தினராக எழுத்தாளர் தீபச்செல்வனும் கலந்து கொண்டனர்.
இதன்போது போட்டியில் முன்னிலை இடங்களைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசில்களாக நூல்கள் வழங்கப்பட்டன.
எதிர்காலத் திரைப்படங்களுக்கான கதைகளை சேமிக்கும் வகையில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டி மற்றும் புத்தக வெளியீடு என்பன வாசிப்பையும் எழுத்தையும் மேம்படுத்தும் வகையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.