என்பாதையும் பயணமும் சரியானது என்பதை மக்கள் உணர்த்தியுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்…
இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ள அரங்கம் நிறைந்த மக்களுடன் ஈசிஎன்டடைமன்ட் நைட் 2024 கனடாவில் வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய திரைப்பிரபலங்களான ராகுல் நம்பியார் மற்றும் ஜனனி பரத்வாஜ் ஆகியோருடன் கனேடிய தேச ஈழத் தமிழ் கலைஞர்களும் பங்குபற்றினர்.
கிருபா பிள்ளையின் வளர்ச்சி கண்டு பொறுக்காத வெகுசிலர் தவறான பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதும் அரங்கம் நிறைந்த மக்களுடன் வெற்றிகரமாக நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பேசிய நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் ஊடகப் போராளியுமான கிருபா பிள்ளை, “எனது வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டு எனக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து தமிழ்த் தேசியத்தின் மீது கல் எறிபவர்களை நினைக்க வேதனையாக உள்ளது அவர்களின் எண்ணமும் மனமும் குறுகியது அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை” என்று தெரிவித்தார்.
அத்துடன் தனக்கு எதிராக செயற்படுவதாக நினைத்து தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகிறவர்களை மக்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர் என்றும் என் பாதையும் பயணமும் சரியானது என்றும் கூறினார்.
எதிர்வரும் காலத்தில் இன்னமும் பல்வேறு நிகழ்வுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுக்க தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் உணர்ச்சிகர உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.
ஒன்பதாவது ஆண்டாக நடந்த ஈசிஎன்டடைமன்ட் நைட் 2024 நிகழ்வில் பல்வேறு தளங்களில் செயற்பட்ட எட்டு ஆளுமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.