ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவுப்படுத்திய பிரித்தானியா!
தமிழ் மக்களது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ் தமிழர்களால் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
இந்த வகையில், மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா வாழ் தமிழர்கள் நிகழ்வுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் MILL LANE, BANBURY, OXFORD OX173NX UNITED KINGDOM என்ற இடத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வரலாற்று பெயர் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
குறித்த தலைமை செயலக நெறிப்படுத்தலில் பிரித்தானியா வாழ் தமிழர்களால் நினைவுகூரப்பட்டுள்ளது.
மேலும், தாயகத்தின் முல்லைத்தீவு பூங்கா மாவீரர் துயிலுமில்லத்தை நினைவுப்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள மாவீரர் கல்லறைகள் சான்றாக உள்ளது.
இதேவேளை, பிரான்ஸ், டென்மார்க்,சுவிட்ஸ்ர்லாந்தின் பல மாநிலங்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் மாவீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.