கனடாவில் பாரிய அலை விசையாழி மூலம் மின்சாரம்.
நோவ ஸ்கோசியாவில் ஒரு பாரிய நிலக்கீழ் விசையாழி மின்சாரத்தை உருவாக்க தொடங்கியுள்ளது. நோவ ஸ்கோசியாவில் PARRSBORO, Fundy விரிகுடாவில் காணப்படும் உலகின் உலகின் மிக உயர்ந்த அலைகளிலிருந்து இம் மின்சாரம் உருவாக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் முதல் நீரோட்ட அலை விசையாழி திட்டம் நோவ ஸ்கோசியாவின் மின்சார கட்டத்துடன் உத்தியோக பூர்வமாக செவ்வாய்கிழமை இணைக்கப்பட்டதாக இந்த லட்சிய திட்டத்ததின் பின்னால் உள்ள கூட்டமைப்பான Cape Sharp Tidal தெரிவித்துள்ளது.
நோவ ஸ்கோசியாவில் உள்ள 500-வீடுகளிற்கு தேவையான ஆற்றல் சக்தியை தற்சமயம் உற்பத்தி செய்கின்றது.