உலகின் முதலாவது பக்கவாத அம்புலன்ஸ் கனடாவில்!.
ஒரு பக்க வாத நோயாளி வைத்தியசாலையை அடைய முன்னர் குணப்படுத்த சாத்தியமான ஒரு CT-ஸ்கானர். உறைவு-உடைக்கும் மருந்துகள் போன்றனவற்றுடன் அமைக்கப்பட்ட கனடாவின் முதல் பக்கவாத அம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
அல்பேர்ட்டா பல்கலைக்கழக வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக அறக்கட்டகளை சார்பில் 3.3மில்லியன் டொலர்கள் மொபைல் சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தப்பட்டது.
“நோயாளி பக்க வாத மையத்திற்கு செல்ல காத்திருப்பதற்கு பதிலாக நாங்கள் பக்க வாத மையத்தை நோயாளியிடம் அனுப்புகின்றோம்” என வைத்தியசாலை பக்கவாத திட்டத்தின் இயக்குநர் டாக்டர் Ashfaq Shuaib தெரிவித்தார்.
நோயாளின் மூளையை ஸ்கான் செய்து இரத்த கட்டியை உடைப்பதற்கான மருந்தை அம்புலன்சிலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம் என இவர் கூறினார்.பக்க வாதத்திலிருந்து நோயாளிகளை குணப்படுத்தலாம் எனவும் கூறினார்.
இந்த அம்புலன்ஸ் எட்மன்டன் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாத நோயாளிகளிற்கான உலகிலேயே முதலாவது CT மொபைல் பக்கவாத அம்புலன்ஸ் இதுவாகும்.
இந்த அம்புலன்சின் செலவு தொகை முழுவதும் நன்கொடை நிதியளிப்பால் வழங்கப்பட்டது.