உங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள்– “நாட்டின் பெரும் பகுதிகளில் பாரம்பரிய கனடிய குளிர்”!
குளிர் மிகுந்த மற்றும் சூறாவளித்தன்மை கொண்ட குளிர்காலம் கனடாவில் இம்முறை காணப்படும் என வானிலை நெட்வேர்க் கணித்துள்ளது.
அதனது குளிர்கால வானிலை முன்னறிவிப்பில் இந்த வருட குளிர்காலம் மிக “பாரம்பரியமான கனடிய குளிர்காலம்”என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் மென்மையான வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இவ்வருட காலநிலை பொதுவானதாக இருக்க மாட்டாதெனவும் தலைமை வானியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
சஸ்கற்சுவான், மனிரோபா, ஒன்ராறியோவின் பெரும்பகுதி மற்றும் கியுபெக் மேற்கு ஆகிய பகுதிகளில் சராசரி குளிர்கால வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் குளிர் மிகுந்ததாக காணப்படும் எனவும் அவர் கூறினார்.
ஆனாலும் குளிர் நிலையானதாக இருக்க மாட்டாதெனவும்— சில நாட்கள் சராசரியை விட வெப்பமானதாக காணப்படும் மற்றய நாட்கள் குளிர் மிகுந்ததாக அமையும் எனவும் தெரிவித்தார்.
வடக்கில்: வடமேற்கு நிலப்பகுதிகள், நுனவெட், யுகொன் மற்றும் கியுபெக் வடக்கின் சில பகுதிகள் ஆகியவை வழக்கத்தை விட வெப்பம் மிகுந்து காணப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இப்பகுதிகள் வழக்கமாக கொடூரமான குளிர் மிகுந்த பகுதிகளாக காணப்படுபவன. ஆனால் இவ்வருடம் குறைவாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் வீழ்படிவு அதன் அனைத்து வடிவங்களிலும்: மழை, பனிபொழிவு, ஆலங்கட்டி மழை அனைத்தும் சராசரிக்கும் மேலாக காணக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு அடையாளங்களும் இவ்வருட குளிர்காலம் பாரம்பரியம் மிக்கதாக” அமையும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன என ஆய்வாளர் தெரிவித்தார்.